ராணுவ வீரர்களுக்கு ரூ.79,000 கோடி மதிப்பில் பாதுகாப்பு பொருட்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல்
தேவையை ஏற்றுக்கொள்வது (AoN) என்பது பாதுகாப்பு கொள்முதல் செயல்முறையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் பேரவை (டிஏசி) முப்படைகளின் பல்வேறு முன்மொழிவுகளுக்கு மொத்தம் ரூ 79,000 கோடி மதிப்பிலான தேவையை ஏற்றுக் கொண்டுள்ளது.
தேவையை ஏற்றுக்கொள்வது (AoN) என்பது பாதுகாப்பு கொள்முதல் செயல்முறையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதில் பாதுகாப்பு கொள்முதல் பேரவை (DAC) அலுவல்பூர்வ ஒப்புதலை வழங்குகிறது.
டிசம்பர் 29, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தின் போது, பீரங்கி படைப்பிரிவுகளுக்கான லோயட்டர் வெடிமருந்து அமைப்பு, குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள், பினாகா மல்டிபிள் லாஞ்ச் ராக்கெட் சிஸ்டம் (எம்ஆர்எல்எஸ்) க்கான நீண்ட தூர வழிகாட்டப்பட்ட ராக்கெட் வெடிமருந்துகள் மற்றும் இந்திய ராணுவத்திற்கான ஒருங்கிணைந்த ஆளில்லா விமானங்களைக் கண்டறிதல் மற்றும் தடுப்பு அமைப்பு எம்கே-II ஆகியவற்றை வாங்க ஏஓஎன் ஒப்புதல் அளிக்கப்பட்டது.





