உடனடியாக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்த தாய்லாந்து, கம்போடியா சம்மதம்: டிரம்ப்
"இரு தரப்பினரும் உடனடி போர் நிறுத்தம் மற்றும் அமைதியை எதிர்பார்க்கிறார்கள்" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் எழுதினார்.

30 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு 130,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்த மூன்று நாட்களாக நடந்த கொடிய எல்லை மோதல்களைத் தொடர்ந்து, தாய்லாந்து மற்றும் கம்போடியா தலைவர்கள் உடனடியாகப் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உடனடியாகச் சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.
தற்போது ஸ்காட்லாந்துக்கு விஜயம் செய்துள்ள அவர், ட்ரூத் சோஷியல் பதிவில், கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய் ஆகியோருடன் தனித்தனியாக பேசியதாகவும், தொடர்ந்து சண்டையிடுவது அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்களைப் பாதிக்கும் என்று இரு தலைவர்களையும் எச்சரித்ததாகவும் கூறினார்.
"இரு தரப்பினரும் உடனடி போர் நிறுத்தம் மற்றும் அமைதியை எதிர்பார்க்கிறார்கள்" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் எழுதினார். மோதலில் மத்தியஸ்தம் செய்வதற்கான தனது முயற்சிகளை விவரித்தார்.
"அவர்கள் உடனடியாக சந்தித்து போர் நிறுத்தத்தை உருவாக்கவும், இறுதியில் சமாதானத்தை ஏற்படுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளனர்!" என்று அவர் மேலும் கூறினார். எவ்வாறாயினும், வெள்ளை மாளிகையோ அல்லது சம்பந்தப்பட்ட தூதரகங்களோ வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் விவரங்களை உறுதிப்படுத்தவில்லை.