Breaking News
        
      இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்
இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு முயற்சிகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
 
        
இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சர் கிடியோன் சா’ர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளார். இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு முயற்சிகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவின் உயர் தலைமைத்துவத்துடன் ஆலோசிக்கவுள்ளார்.
“சா’ர் நவம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் நியூ டெல்லிக்கு இருநாள் பயணமாக வருகிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் சந்திக்கவுள்ளார்,” என்று இஸ்ரேல் தரப்பிலிருந்து வெளியான தகவலை பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.





 
  
