இந்தியா-பாகிஸ்தான் போர் எதிரொலி: துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் தயார்நிலையைச் சிறிலங்கா ஆய்வு
உடனடி சவால்களை நிர்வகிப்பதற்கு மட்டுமன்றி, வளர்ந்து வரும் வாய்ப்புகளையும் பற்றிக்கொள்ளச் சிறிலங்கா தயாராக இருக்க வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.

சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களின் சாத்தியமான தாக்கத்தை மதிப்பிடுவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் பொது விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் உயர்மட்ட கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் உரையாற்றிய அவர், வளர்ந்து வரும் உலகளாவிய அரசியல் இயக்கவியலை எதிர்கொள்ளும் வகையில் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் செயல்பாட்டு தயார்நிலையை பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். உடனடி சவால்களை நிர்வகிப்பதற்கு மட்டுமன்றி, வளர்ந்து வரும் வாய்ப்புகளையும் பற்றிக்கொள்ளச் சிறிலங்கா தயாராக இருக்க வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.
"தற்போதைய புவிசார் அரசியல் சூழல் நாம் செயலூக்கத்துடன் செயல்பட வேண்டும். நமது உள்கட்டமைப்பு தற்போதைய செயல்பாடுகளை சமரசம் செய்யாமல் அதிகரித்த தேவையை கையாளும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும், "என்று அவர் கூறினார்.