கனரா வங்கி தங்க கொள்ளையில் மேலும் 12 பேர் கைது
சில சந்தேக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும், தேடுதல் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கனரா வங்கி லாக்கர் கொள்ளை சம்பவம் தொடர்பாக கர்நாடக காவல்துறையினர் மேலும் 12 பேரை கைது செய்துள்ளனர். சமீப காலமாக கர்நாடகாவில் நடந்த மிகப்பெரிய வங்கிக் கொள்ளை சம்பவங்களில் இதுவும் ஒன்று என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஜயபுர மாவட்டம் மனகுளிக் கிராமத்தில் உள்ள கனரா வங்கி கிளையில் மே 23 முதல் 25 வரை இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. புதிதாக கைது செய்யப்பட்ட 12 பேரில் பாலராஜ் யெர்ரெகுலா, குண்ட் ஜோசப் ஷியாம்பாபு, சந்தன்ராஜ் பிள்ளை மற்றும் இஜாஸ் தார்வாட் ஆகியோர் அடங்குவர். சில சந்தேக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும், தேடுதல் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுவரை, திருடப்பட்ட சுமார் 39 கிலோ தங்க நகைகள், ரூ .1.16 கோடி ரொக்கம் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களைக் காவல்துறையினர் மீட்டனர். மொத்த மீட்பு ரூ.39.26 கோடியை தாண்டியுள்ளது.