மின் கட்டண திருத்தத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க நீதிமன்றம் தேதியை நிர்ணயித்துள்ளது
இந்த மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் வீட்டு மின் கட்டண திருத்தத்தை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் திகதிகளை நிர்ணயித்துள்ளது.
இதன்படி, குறித்த மனுக்கள் ஜூலை 17 மற்றும் 19 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.