யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் பெருமளவிலான போலி நாணயத்தாள்களுடன் கைது
அவர்களிடம் 5000 ரூபா 250 போலி நாணயத்தாள்களும் 500 ரூபா 27 போலி நாணயத்தாள்களும் காணப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், பளையில் 5,000 மற்றும் 500 ரூபாய் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை ஆனையிறவு பொலிஸ் வீதித்தடையில் வைத்து பளை பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட்ட போது அவர்களிடம் 5000 ரூபா 250 போலி நாணயத்தாள்களும் 500 ரூபா 27 போலி நாணயத்தாள்களும் காணப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக மனிதர்களில் ஒருவர் 24 வயதுடைய யாழ் பல்கலைக்கழக மாணவர் எனவும் மற்றைய சந்தேக மனிதர் 26 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி எனவும் அவர்கள் தெரிவித்தனர். இவர்கள் புதுக்குடியிருப்பு மற்றும் மிருசுவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிரிவினர் மேற்கொள்ள உள்ளனர்.





