கணேமுல்ல சஞ்சீவ படுகொலை கம்பஹா ஒஸ்மன்ட் கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்ன எனும் 'கணேமுல்ல சஞ்சீவ' படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாகக் கூறப்படும் 'கம்பஹா ஒஸ்மன்ட்' எனப்படும் ஒஸ்மன்ட் குணசேகர என்பவரைக் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் 14-05-2026 அன்று கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி, கொழும்பு இலக்கம் 5 நீதவான் நீதிமன்ற அறையில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, சட்டத்தரணி போன்று வேடமிட்டு வந்த துப்பாக்கிதாரி ஒருவரால் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே குறித்த துப்பாக்கிதாரி, துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டுவந்திருந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட் பல சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழுவினருடன் இணைந்து இக்கொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மறுதின பத்மசிரிபேரேரா ஏனும் கெஹேல் பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலககுழுவை சேர்ந்த பலரும் இந்த குற்றத்தை வழிநடத்தியாக தெரிவிக்கப்படுகிறது.





