எரிபொருள் சேகரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை - வலுச்சக்தி அமைச்சு
வாகனத்தின் உரிமம் அல்லது தொலைபேசி இலக்கம் மாற்றமடைந்திருப்பின் 2026.03.15 ஆம் திகதி காலை 06 மணியில் இருந்து https://fuelpass.gov.lk/ என்ற வலைத்தளம் ஊடாக மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
எரிபொருள் விநியோகத்தில் பூகோள மட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினர் முறையற்ற வகையில் எரிபொருளை சேகரித்து அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். எரிபொருள் கொள்வனவில் வழமைக்கு மாறாக அதிக கேள்வி நிலவுவதற்கு இதுவும் ஒரு பிரதான காரணியாக அமைந்தது. இவ்வாறான செயற்பாட்டை தடுப்பதும்,மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகுமென வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தின் உறுதிப்பாட்டை பாதுகாப்பதற்காக இதற்கமைய 15-03-2026 அன்று காலை 06 மணிமுதல் அமலுக்குவரும் வகையில் எரிபொருள் கொள்வனவுக்காக கோட்டா (கியூ.ஆர்) முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது.கோட்டா முறைமை இல்லாமல் இனி எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள மோதல் நிலைமையினால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டில் எரிபொருள் விநியோகத்துக்கான கேள்வி எதிர்பார்க்காத வகையில் உயர்வடைந்துள்ள காரணத்தால் கையிருப்பில் உள்ள எரிபொருளை பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு முன்னுரிமையளித்து முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் பூகோள மட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினர் முறையற்ற வகையில் எரிபொருளை சேகரித்து அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். எரிபொருள் கொள்வனவில் வழமைக்கு மாறாக அதிக கேள்வி நிலவுவதற்கு இதுவும் ஒரு காரணியாக அமைந்தது.
கறுப்பு சந்தையில் எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களின் செயற்பாட்டை தடுக்கவும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இதற்கமைய நேற்று காலை 06 மணிமுதல் அமலுக்குவரும் வகையில் எரிபொருள் கொள்னவுக்காக கோட்டா (கியூ.ஆர்) முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது.கோட்டா முறைமை இல்லாமல் இனி எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாது.
கோட்டா முறைமையின் கீழ் ஒருவாரத்துக்குரிய எரிபொருள் விநியோகிக்கப்படும். இதற்கமைய பேரூந்துக்கு 60 லீற்றர், மோட்டார் சைக்கிளுக்கு 5 லீற்றர்,வேனுக்கு 40 லீற்றர், மோட்டார் காருக்கு 15 லீற்றர்,லொறிக்கு 200 லீற்றர், நில வாகனத்துக்கு 25 லீற்றர்,முச்சக்கர வண்டிக்கு15 லீற்றர்,விசேட தேவையுடைய வாகனம் (அம்புலன்ஸ் வண்டி) 40 லீற்றர்,க்வோட்ரிசைக்கிள் 5 லீற்றர் என்ற அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும்.
கோட்டா (கியூ.ஆர்) பெற்றுக்கொள்ளும் முறைமை
இதற்கு முன்னர் கோட்டா முறைமையை பதிவு செய்தவர்கள், வாகனத்தின் உரிமம் அல்லது தொலைபேசி இலக்கம் மாற்றமடைந்திருக்காவிடின்,2026.03.14 நள்ளிரவு முதல் https://fuelpass.gov.lk/ என்ற வலைத்தளம் ஊடாக தமக்குரிய கோட்டாவை பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.
வாகனத்தின் உரிமம் அல்லது தொலைபேசி இலக்கம் மாற்றமடைந்திருப்பின் 2026.03.15 ஆம் திகதி காலை 06 மணியில் இருந்து https://fuelpass.gov.lk/ என்ற வலைத்தளம் ஊடாக மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு முன்னர் கோட்டா முறைமையை பதிவு செய்யாத மற்றும் மோட்டார் வாகன திணைக்களத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு, 2026.03.15 காலை 06 மணிமுதல் https://fuelpass.gov.lk/ என்ற வலைத்தளம் ஊடாக பதிவு செய்ய முடியும்.
நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக குறித்த நிறுவனத்துடன் ஒன்றிணைந்து விசேட விழிமுறைகளின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றுள்ளது.





