புத்தகயாவுக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்
இந்த விஜயத்தின் போது, புத்த கயா விகாரையின் செயலாளர் கலாநிதி மகாஸ்வேதா மகாரதி மற்றும் அதன் அபிவிருத்தி குழுவைச் சேர்ந்த புத்த ரத்ன தேரர், தம்மிஸ்ஸர தேரர், கௌடின்ய தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்து அவர் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
பொதுஜனபெரமுவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக் ஷ, இந்தியாவின் புத்தகயாவிற்கு விஜயம் செய்து, அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகாபோதி மகா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, புத்த கயா விகாரையின் செயலாளர் கலாநிதி மகாஸ்வேதா மகாரதி மற்றும் அதன் அபிவிருத்தி குழுவைச் சேர்ந்த புத்த ரத்ன தேரர், தம்மிஸ்ஸர தேரர், கௌடின்ய தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்து அவர் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, 1891 ஆம் ஆண்டு அநகாரிக தர்மபாலவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய மகாபோதி சங்கத்திற்கும் நாமல் ராஜபக்ஷ விஜயம் செய்ததோடு புத்த கயா மத்திய நிலையத்தின் வணக்கத்திற்குரிய கடகந்துரே ஜினானந்த தேரர், முல்தெனியவல சுசீல தேரர், ஞானரத்ன தேரர் மற்றும் வாகீச தேரர் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார்