நாமலுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிக காலம் அவகாசம் உள்ளது – மஹிந்த ராஜபக்ஷ
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது உள்ளக பிரச்சினைகளை விரைவில் தீர்க்கும் என்று தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (07) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியானது கூட்டணியை அமைப்பது சவால் அல்ல என்றும் குறிப்பிட்டார். 10 கூட்டணிகள் அமைத்தாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் மக்கள் [ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்] எல்லா இடங்களிலும் [கூட்டணிகளில்] இருப்பது நல்லது." ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி நிச்சயமாக பெயரிடும் என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்படும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். "நிச்சயமாக, அவர்கள் ஒரு வேட்பாளரை அறிவிப்பார்கள். நாங்கள் அவர்களை (கட்சி உறுப்பினர்களை) இதுவரை அழைக்கவில்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்போம்" என்றார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தனது மகனுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்னும் அதிக காலம் இருப்பதாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது உள்ளக பிரச்சினைகளை விரைவில் தீர்க்கும் என்று தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று (07) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியானது கூட்டணியை அமைப்பது சவால் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
10 கூட்டணிகள் அமைத்தாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் மக்கள் [ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்] எல்லா இடங்களிலும் [கூட்டணிகளில்] இருப்பது நல்லது."
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி நிச்சயமாக பெயரிடும் என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்படும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
"நிச்சயமாக, அவர்கள் ஒரு வேட்பாளரை அறிவிப்பார்கள். நாங்கள் அவர்களை (கட்சி உறுப்பினர்களை) இதுவரை அழைக்கவில்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்போம்" என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தனது மகனுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்னும் அதிக காலம் இருப்பதாக தெரிவித்தார்.