Breaking News
ராகமாவில் 'இராணுவ உபுல்' சுட்டுக்கொலை
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைத்துப்பாக்கி ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ராகம, பத்துவத்தையில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கனேமுல்ல சஞ்சீவவின் கூட்டாளியான இராணுவ உபுல் என அடையாளம் காணப்பட்ட அவர், முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பத்துவத்தை கிராம சன்வர்தன மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றுக்கு முன்னால் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைத்துப்பாக்கி ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.





