மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு கமாண்டர் பேமரத்ன
மதுவரி ஆணையாளர் நாயகம் பதவியில் சேவையாற்றும் இலங்கை உள்நாட்டு இறைவரி சேவையின் விசேட தர அலுவலர் திரு. யு.எல்.உதயகுமார பெரேரா அவர்களுக்கு 2025-07-10 திகதியில் 60 வயது பூர்த்தியடைவதால் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு கடற்படையின் ஓய்வுபெற்ற கமாண்டர் எம்.பீ.என்.ஏ.பேமரத்ன நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதுவரி ஆணையாளர் நாயகம் பதவியில் சேவையாற்றும் இலங்கை உள்நாட்டு இறைவரி சேவையின் விசேட தர அலுவலர் திரு. யு.எல்.உதயகுமார பெரேரா அவர்களுக்கு 2025-07-10 திகதியில் 60 வயது பூர்த்தியடைவதால் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
அதற்கமைய, வெற்றிடமாகும் மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற கொமடோர் எம்.பீ.என்.ஏ. பேமரத்னவை நியமிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது என்றார்.





