புத்தளம் வனாத்தவில்லு பயங்கரவாத பயிற்சி முகாம் - குற்றச்சாட்டை மறுத்தார் 6வது பிரதிவாதியான சாஜித் மௌலவி
குறித்த பிரதிவாதி தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வது தொடர்பில் பரிசீலிப்பதற்காக 06-11-2026 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர், 2018 ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 2019 ஜனவரி 16 ஆம் திகதி வரை புத்தளம், வனாத்தவில்லு - லெக்டோஸ்வத்தை பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியமை, சஹ்ரான் ஹாஷிம் மற்றும் மொஹமட் ஹஸ்தூன் ஆகியோருடன் இணைந்து துப்பாக்கி, 12 தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை சட்டவிரோதமான முறையில் திரட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை நிறாகரிப்பதாக, 6 வது பிரதிவாதி மொஹமட் ரமீஷ் மொஹமட் சாஜித் எனும் சாஜித் மௌலவி திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த பிரதிவாதி தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வது தொடர்பில் பரிசீலிப்பதற்காக 06-11-2026 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. மேல்நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டாரவின் தலைமையில் , ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்ரமசேகர ஆகியோரைக் கொண்ட நிரந்தர முவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைகளுக்காக சாஜித் மௌலவி சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.





