Breaking News
ஆகஸ்ட் மாதம் முதன்மை பணவீக்கம் 8.0 சதவீதமாக உயர்வு
கடந்த ஜூலை மாதம் 6.3 சதவீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 8.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதம் முதன்மை பணவீக்கம் 8.0 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
கொழும்பு நகர் பிரதேசங்களின் மாதாந்த நுகர்வோர் பணவீக்கத்தை முன்னிலைப்படுத்தி,தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆகஸ்ட் மாதத்திற்குரிய விலைச்சுட்டெண்ணை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய கடந்த ஜூலை மாதம் 6.3 சதவீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 8.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதேபோல் உணவல்லாத பணவீக்கம் ஜுலை மாதம் 7.8 சதவீதமாக காணப்பட்ட நிலையில் கடந்த மாதம் 7.7 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
அதேபோல் அற்ககோல், பானங்கள், புகையிலைக்கான பணவீக்கம் ஜுலை மாதம் 0.0 சதவீதமாக காணப்பட்ட நிலையில் கடந்த மாதம் -1.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.





