கனடாவில் தேடப்பட்டு வந்த கியூபெக் குற்றவாளி ஒன்ராறியோவில் கைது
இரண்டாம் நிலைக் கொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் அயூப் முகமது, புதன்கிழமை வாலிஃபீல்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் அதிகம் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி ஒருவர், ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று கைது செய்யப்பட்டதாக கியூபெக் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜோர்டன் காக்னே கொலை வழக்கில் தொடர்புடைய அயூப் முகமது கைது செய்யப்பட்டதை, புதன்கிழமை கியூபெக் மாகாண காவல்துறையான Sûreté du Québec (SQ) உறுதிப்படுத்தியது.
கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி சலாபெரி-டி-வாலிஃபீல்டு பகுதியில் ஜோர்டன் காக்னே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் 19 வயதான அயூப் முகமதுவுக்கு எதிராக கனடா முழுவதும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரை ஒன்ராறியோ மாகாணத்தின் லண்டன் நகர காவல்துறையினர் கைது செய்தனர்.
இரண்டாம் நிலைக் கொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் அயூப் முகமது, புதன்கிழமை வாலிஃபீல்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
அவரை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை அளிப்பவர்களுக்கு 50,000 டாலர் வெகுமதி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.





