தித்வாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 207 மில்லியன் ரூபா மீதம் - நாமல் ராஜபக்ஷ எம்.பி.
தித்வாவுக்கு ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதில் 207 மில்லியன் ரூபா மீதமாகி இருக்கிறது.
பொருளாதாரம் அபிவிருத்தியடைய வேண்டும் என்றால் முதலாவதாக அரசாங்கம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாட்டுக்காக செலவிட வேண்டும். ஒதுக்கப்படும் நிதி செலவிடப்படாமல் திறைசேரிக்கு செல்லும் நிலையே இருக்கிறது.தித்வாவுக்கு ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரூபாவில் 207 மில்லியன் ரூபா மீதமாகி இருக்கிறது. ஒதுக்கும் பணத்தில் வேலைசெய்ய முடியாதவர்களாக இருக்கிறார்களென நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 14-11-2026 அன்று இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதி கடந்த வருடம் வரவு செலவு திட்டத்தை முன்வைக்கும்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நூற்றுக்கு 7 சதவீதத்துக்கு கொண்டுவருவதாக தெரிவித்திருந்தார். அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்கும்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5,3 வீதமாக இருந்தது. ஆனால் ஜனாதிபதி அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைக்கும்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.2 வீதமாக குறைவடைந்துள்ளது.
அதேபோன்று அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்கும் நாட்டின் பணவீக்கம் மறை பெறுமானத்தில் இருந்தது. நீங்கள் 3வருட ஆட்சி செய்த பின்னர் நாட்டின் பணவீக்கம் மறை பெறுமானத்தில் இருந்து 8.3 வீதமாக உயர்ந்துள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைந்தபட்சம் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்கும்போது டொலரின் பெறுமதி 295 ரூபாவாக இருந்தது. தற்போது அது 332 ரூபாவாகும். இதற்கு பல்வேறு காரணங்களை அரசாங்கத்துக்கு தெரிவிக்க முடியும். ஆனாலும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு பொருளாதாரத்தை முகாமமைத்துவம் செய்யும் பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கவேண்டும்.
அத்துடன் அரசாங்கத்தின் வரி கொள்கை, வசதிபடைத்தவர்களை மேலும் வசதியடையச் செய்யும் வகையிலும் வசதிகுறைந்தவர்களை முற்றாக இல்லாமலக்கும் வகையிலே இருக்கிறது. பாடசாலை உபகலரணங்களுக்கான வரியை நீக்கி இருப்பதை வரவேற்கிறோம்.
ஆனால் தேர்தல் காலத்தில் தெரிவித்த மக்களின் அத்தியாவசிய பொருட்களின் வரி தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசாங்கத்தின் வரிக் கொள்கையினால் கோடிஸ்வர வியாபாரிகளே நிவாரணம் பெறுகிறார்கள்.
180 அலகுகளுக்கு அதிகம் மின்சாரம் பாவிக்கும் நுகர்வோருக்கு ஸ்மாட் மீட்டர் இலவசமாக வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அப்படியானால் வசதிபடைத்தவர்களுக்கே இதனை வழஙகப்போகிறீர்கள். அப்படியானால் வரிய மக்களின் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கத்தின் திட்டம் என்ன?
அத்துடன் புதிய முதலீட்டாளர்களை கொண்டுவர அரசாங்கம் குழு அமைத்து நடவடிக்கை எடுத்துவருவதாக ஜனாதிபதி தெரிவிக்கிறார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் நாட்டில் இருந்த முதலீட்டாளர்கள் ஏன் நாட்டைவிட்டு செல்ல இடமளித்தீர்கள் என கேட்கிறோம்.
அதனால் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வரும்போது அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரச அதிகாரிகளுக்கு இடமளிக்க வேண்டும். இன்று அரச அதிகாரிகள் வினைத்திரனுடன் செயற்படுவதில்லை. அவர்கள் செயற்பட பயப்படுகிறார்கள். அதனால் அரசாங்கம் நாட்டில் இருக்கும் முதலீட்டாளர்களை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் ஊழல் மோசடிகளை நிறுத்தி திறைசேரியை நிரப்பியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வருகிறது. ஆனால் இந்த வருடத்துக்கு அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் எத்தனை வீதம் மக்களுக்கு செலவிடப்பட்டது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியை செலிவடாமல் திறைசேரிக்கு திருப்பி அனுப்புவதால், நாட்டில் பணம் பரிமாறப்படுவதில்லை.
பணம் பரிமாறப்பட்டாலே பொருளாதாரம் அபிவிருத்தியடையும். அதனால் பொருளாதாரம் அபிவிருத்தியடைய வேண்டும் என்றால் முதலாவதாக உங்களது அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாட்டுக்காக செலவிட வேண்டும். தித்வாவுக்கு ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதில் 207 மில்லியன் ரூபா மீதமாகி இருக்கிறது. ஒதுக்கும் பணத்தில் வேலைசெய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்றார்.





