திஷா பதானியை சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
இது கடவுளை வணங்கும் வழிபாட்டு நிகழ்வா அல்லது கேமராக்களுக்கு போஸ் கொடுக்கும் ஃபேஷன் ஷோவா? என்று மக்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
மும்பையில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் நடத்திய விநாயகர் சதுர்த்தி விழாவில், பாலிவுட் நடிகை திஷா பதானி அணிந்து வந்த கவர்ச்சி ஆடைதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது.
விழாவில் திஷா பதானி கலந்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, அவர் அணிந்திருந்த ஆழமான கழுத்துப்பகுதி (plunging neck) கொண்ட ரவிக்கையும், கவர்ச்சி சிவப்பு புடவையும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது கடவுளை வணங்கும் வழிபாட்டு நிகழ்வா அல்லது கேமராக்களுக்கு போஸ் கொடுக்கும் ஃபேஷன் ஷோவா? என்று மக்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
மற்ற விருந்தினர்கள் அனைவரும் கண்ணியமான பாரம்பரிய ஆடைகளில் வந்திருக்க, எல்லை மீறிய கவர்ச்சியில் வந்த திஷாவால் நாகரிகமாக உடையணிய முடியாதா என சாடியுள்ளனர். மேலும், மத வழிபாட்டு நிகழ்வுகளுக்கு என கட்டாயம் தனி ஆடைக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். நான் ஆடைக்கு எதிரானவன் அல்ல; ஆனால் பக்தி பரவசத்தோடு நடத்தப்படும் பூஜைக்கு இந்த கவர்ச்சி ஃபேஷன் கொஞ்சமும் பொருந்தாது என்று காட்டமாக விமர்சித்துள்ளனர்.





