காஸா அழிப்புக்கு எதிராக இலங்கையில் தொடர் போராட்டம்
காஸாவில் இடம்பெற்றுவரும் இனவழிப்புக்கு எதிராக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் ஒன்றிணைந்து 14-06-2025 அன்று நண்பகல் 12மணிக்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்துக்கு முன்பாக அமைதியான முறையிலான கவனயீர்ப்புப்போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
காஸாவில் இடம்பெற்றுவரும் இனவழிப்புக்கு எதிராக அமெரிக்கத்தூதரகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி எதிர்ப்பை வெளிப்படுத்திய செயற்பாட்டாளர்கள், அமெரிக்கா தான் பிரதான குற்றவாளி எனவும், அமெரிக்காவின் கைகளில் இரத்தம் தோய்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
காஸாவில் இடம்பெற்றுவரும் இனவழிப்புக்கு எதிராக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் ஒன்றிணைந்து 14-06-2025 அன்று நண்பகல் 12மணிக்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்துக்கு முன்பாக அமைதியான முறையிலான கவனயீர்ப்புப்போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இருப்பினும் இஸ்ரேலினால் காஸாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்புக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், மதகுருமார், பலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பலஸ்தீனத்தில் மக்கள் முகங்கொடுத்துவரும் பேரழிவின் காட்சிகளையும், 'அமெரிக்காவே, நீதான் பிரதான குற்றவாளி. உனது கைகளில் இரத்தம் தோய்ந்திருக்கிறது' எனும் வாசகமும் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியிருந்தனர்.
அத்தோடு 'அதிகாரம் மிக்க உலகநாடுகளுக்கு சமாதானம் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் போரின் ஊடாகவே வாழ்கிறார்கள்', 'பலஸ்தீன மக்களுக்கு அவர்களது நிலம் வேண்டும்', 'பலஸ்தீனத்தை விடுவியுங்கள்', 'மக்களை இடம்பெயர்வதற்கு நிர்பந்தப்படுத்தியதைத் தவிர போர் வேறெதனையும் தரவில்லை' எனும் வாசகங்களுடனான பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
அத்தோடு சிலர் பலஸ்தீனக் கொடியையும், இரத்தம் தோய்ந்த சடலம் போன்று துணிகளால் சுற்றப்பட்ட பொம்மைகளையும் ஏந்தியிருந்தனர்.