எந்த பாதகமான தாக்கங்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார் - அமைச்சர் அனுர கருணாதிலக
நாட்டின் விவசாயம் மற்றும் எரிசக்தித் துறைகளைப் பாதிக்கக்கூடும் என்பதாலும் இந்த சூழ்நிலைகளை எதிர்கொள்ள அரசாங்கம் உரிய திட்டங்களுடன் தயாராகவுள்ளது.
மத்திய கிழக்கு யுத்த சூழல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ, லா நினோ காலநிலை மாற்றங்கள் போன்ற உலகளாவிய காரணிகளால் இந்த ஆண்டில் எஞ்சிய காலத்தில் நாட்டின் எரிசக்தி மற்றும் வாழ்க்கைச் செலவுகளில் ஏற்படக்கூடிய எந்தவொரு பாதகமான தாக்கங்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 11-06-2026 அன்று இடம்பெற்ற வலுசக்தி மற்றும் வாழ்க்கைச்செலவு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மத்திய கிழக்கு யுத்த சூழல் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளைப் பாதிப்பதாலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ, லா நினோ காலநிலை மாற்றங்கள் நாட்டின் விவசாயம் மற்றும் எரிசக்தித் துறைகளைப் பாதிக்கக்கூடும் என்பதாலும் இந்த சூழ்நிலைகளை எதிர்கொள்ள அரசாங்கம் உரிய திட்டங்களுடன் தயாராகவுள்ளது.
அத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கும் மாற்றுத் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி அமைச்சுக்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என்றார்.





