குற்ற புலனாய்வு திணைக்களத்துக்கு செல்வதை விடவும் மரணிப்பதே மேல் - சுரேஷ்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஸ் சலேவை அவரது சட்டத்தரணி சந்தித்து, தற்போதைய நிலைவரம் தொடர்பில் குறிப்பிட்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
குற்ற புலனாய்வுத் திணைக்களம் ஒரு நரகம் அங்கு மீண்டும் செல்ல விரும்பவில்லை.அங்கு செல்வதை விட இறப்பதே மேல். உண்ணாவிரத போராட்டத்தை கைவிட போவதில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்தவாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே குறிப்பிட்டுள்ளதாவ அவரது சட்டத்தரணி அசித் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஸ் சலேவை அவரது சட்டத்தரணி சந்தித்து, தற்போதைய நிலைவரம் தொடர்பில் குறிப்பிட்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சுரேஸ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி சானி அபேசேகர தன் மேல் பகைமையுடன் செயற்படுகிறார். மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலுக்குச் செல்ல போவதில்லை.
தடுப்புகாவல் ஒரு நகரம் அங்கு செல்வதை காட்டிலும் இறப்பதே மேல். ஆகவே உண்ணாவிரதப் போராட்டத்தை தற்போது கைவிடப் போவதில்லை என்று குறிப்பிட்டதாக அவரது சட்டத்தரணி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.





