பா.ஜ.க.தமிழக மாநில தலைவருடன் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் சந்திப்பு
தமிழக அரசியல் தலைவர்களுடன் நடத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை பெரியார் திடலிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரவு வேல்முருகனை அவரது அலுவலகத்திலும் சந்தித்தனர்.
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை டெல்லி பிரயோகிக்கவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத் தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர்.
அங்கு தமிழக அரசியல் தலைவர்களுடன் நடத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை பெரியார் திடலிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரவு வேல்முருகனை அவரது அலுவலகத்திலும் சந்தித்தனர்.
அதேவேளை 20-12-2025 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள், 'தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை இந்தியா பிரயோகிக்கவேண்டும்' என வலியுறுத்தினர். அத்தோடு இருநாடுகளுக்கும் இடையில் தீர்வின்றி தொடரும் மீனவர் பிரச்சினை குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.





