பிரதமர் ஹரணியுடன் இந்திய வெளியுறவு செயலாளர் விரிவாக கலந்துரையாடல்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட 05-08-2026 அன்று நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அலரிமாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கை - இந்திய நாடுகளின் முன்னுரிமைக்குரிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுபடுத்துவுதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட 05-08-2026 அன்று நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அலரிமாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான வலுவானதும், மக்களை மையப்படுத்தியதுமான மிகநெருங்கிய நல்லுறவை இருதரப்பினரும் மீளுறுதிப்படுத்தினர். அத்தோடு இருநாடுகளினதும் முன்னுரிமைக்குரிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுபடுத்துவுதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
அதேபோன்று இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், கல்வித்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. டிஜிட்டல் கல்வியை முன்னெடுத்தல் மற்றும் தரமான கற்றல் வாய்ப்புக்களுக்கான அணுகலை அதிகரித்தல் உள்ளடங்கலாக கல்வித்துறையை மறுசீரமைப்பதில் அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயங்கள் குறித்து பிரதமர் விளக்கமளித்தார்.
மேலும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் முக்கியத்துவம் வழங்கிக் கலந்துரையாடப்பட்டது.





