சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவின் உறுப்பினர் ரில்வின் சந்திப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் வாங் ஜுன்ஷெங்இ அத்தகைய உதவி எதிர்காலத்திலும் தொடரும்.
இலங்கைக்கான சீனாவின் உதவி எதிர்காலத்திலும் தொடரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களை அடுத்தாண்டு முதல் முறையாக செயற்படுத்த வேண்டும். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு விருத்திக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோமென சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவின் உறுப்பினர் வாங் ஜுன்செங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இரு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்செங் 25-12-2025 அன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்துக்குச் சென்று (ஜே.வி.பி) கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் ஜே.வி.பி தலைவர்கள் குழுவை சந்தித்தனர்.
இச்சந்திப்பில் இலங்கைக்கான சீனத் தூதர் கீ சென்ஹோங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் சர்வதேசத் துறையின் கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியகத்தின் இயக்குநர் ஜெனரல் பெங் சியுபின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொழில் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி,கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், வர்த்தகம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சருமான வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இந்தப் பேச்சுவார்த்தையில் ஜே.வி.பி.யின் வரலாறு,நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் ஜனாதிபதி அனுர திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் கீழ் 2025 இல் மேற்கொள்ளப்பட்ட கூட்டுறவு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டன.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சீன அரசாங்கம் வழங்கிய உதவி மற்றும் ஆதரவுக்கு ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் வாங் ஜுன்ஷெங்இ அத்தகைய உதவி எதிர்காலத்திலும் தொடரும் . கடந்த அக்டோபரில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் 4வது முழுமையான அமர்வும், 20ஆவது மத்திய குழுவிற்கு இணையாக 23 ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டமும் வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டிற்குள் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் சீனாவின் 15வது ஐந்தாண்டுத் திட்டம் குறித்து வாங் ஜுன்ஷெங் மேலும் கருத்துக்களைத் குறிப்பிட்டார். எதிர்வரும் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தேவை மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.





