ஆப்கானிஸ்தானில் மசூதி மீது துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி
இறந்தவர்களில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை அடங்குவதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் ஹெராத் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் மவ்லவி நேசர் அகமது அலிஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மேற்கு ஆப்கானிஸ்தானில் திங்கள்கிழமை இரவு தொழுகை நேரத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்று மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இறந்தவர்களில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை அடங்குவதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் ஹெராத் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் மவ்லவி நேசர் அகமது அலிஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் தெளிவாகத் தெரியவில்லை.
2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதிலிருந்து பாதுகாப்பை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவதாக தலிபான்கள் கூறியுள்ளனர். ஆனால் 20 ஆண்டுகால போர் முடிவடைந்த போதிலும் பள்ளிவாசல்கள், மத மதரசாக்கள் மற்றும் அரசாங்கக் கட்டடங்களைக் குறிவைக்கும் தாக்குதல்கள் தொடர்கின்றன.





