ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்தோம் - அமெரிக்கா அறிவிப்பு
'IRIS Dena' என அழைக்கப்படும் ஈரானிய போர்க்கப்பல் ஒன்று 04-03-2026 அன்று அதிகாலை இலங்கைக்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோவைப் (Torpedo) பயன்படுத்தி ஈரானிய கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். எனினும், தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலின் பெயரை அவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதேவேளை, 'IRIS Dena' என அழைக்கப்படும் ஈரானிய போர்க்கப்பல் ஒன்று 04-03-2026 அன்று அதிகாலை இலங்கைக்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
அதிகாலை வேளையில் குறித்த கப்பலில் இருந்து விடுக்கப்பட்ட அவசர உதவிக் கோரிக்கைக்கு அமைய, இலங்கை கடற்படையினர் உடனடியாகச் செயற்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
விபத்து நிகழும் போது அந்தக் கப்பலில் சுமார் 180 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 32 பேர் இலங்கை கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எவ்வாறாயினும், மூழ்கிய கப்பலில் இருந்த சுமார் 140 பேரின் கதி என்னவென்று இதுவரை தெரியவரவில்லை எனவும், அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





