பெண்களின் இரவு பணிகுறித்து வர்த்தமானி அறிவிப்பு
கடை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்து தொழில் அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரவில் சுகாதார பணியாளர்களாகவும் உணவு சேவை பணியாளர்களாகவும் பணியாற்ற அனுமதிக்கும் வர்த்தமானி தொழில் அமைச்சினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
கடை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்து தொழில் அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதுவரையான காலமும் இந்த சட்டம் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மாலை 6.00 மணிக்குப் பிறகு பெண்கள் துப்பரவு பணியாளர்களாக பணியமர்த்தலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சட்டம் திருத்தப்பட்டு, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மாலை 6.00 மணிக்கு பிறகும் மறுநாள் காலை 6.00 மணிக்கு முன்பும் சுகாதார பணியாளர்களாகவோ அல்லது உணவு சேவைப் பணியாளர்களாகவோ பணியமர்த்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த காலப்பகுதியில் சேவையில் ஈடுபடும் பெண்களுக்கு பொருத்தமான தங்குமிடம்,போக்குவரத்து வசதிகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் நலன்புரி ஆகியவற்றை வழங்குவது முதலாளியின் பொறுப்பு என்றும் தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.





