இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை 5.17 மில்லியன்
வீட்டுத்தோட்டம் மற்றும் பொது இடங்களுக்கு வருகைத் தரும் காட்டு விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணிகள் நடந்த மார்ச் மாதமளவில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.இந்த அறிக்கை மீள்பரிசீலனை செய்யப்பட்டு இறுதி அறிக்கை தயார்ப்படுத்தப்பட்டது.
நாட்டின் சகல மாவட்டங்களிலும் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு தரவுகளுக்கமைய குரங்குகளின் எண்ணிக்கை 5.17 மில்லியனாகவும், மந்திகளின் எண்ணிக்கை 1.74 மில்லியனாகவும், மர அணில்களின் எண்ணிக்கை 2.66 மில்லியனாகவும், மயில்களின் எண்ணிக்கை 4.24 மில்லியனாகவும் காணப்படுகிறது. என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர், பிரதான நிறைவேற்று அதிகாரியான எச்.எஸ்.சந்திக தெரிவித்தார்.
கண்டி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் குரங்குகளின் எண்ணிக்கை உயர்வாகவும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் குறைவாகவும் காணப்படுகிறது.குறுகிய காலத்தில் காட்டு விலங்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
விவசாயத்துறை அமைச்சின் காரியாலயத்தில் 12-06-2025அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, வீட்டுத்தோட்டம் மற்றும் பொது இடங்களுக்கு வருகைத் தரும் காட்டு விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணிகள் நடந்த மார்ச் மாதமளவில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.இந்த அறிக்கை மீள்பரிசீலனை செய்யப்பட்டு இறுதி அறிக்கை தயார்ப்படுத்தப்பட்டது.
குரங்கு, மந்தி, மர அணில் மற்றும் மயில் ஆகிய நான்கு வகையிலான காட்டு விலங்குகள் கணக்கெடுக்கப்பட்டன.
இதற்கமைய நாட்டின் சகல மாவட்டங்களிலும் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளுக்கமைய குரங்குகளின் எண்ணிக்கை 5.17 மில்லியனாகவும், மந்திகளின் எண்ணிக்கை 1.74 மில்லியனாகவும், மர அணில்களின் எண்ணிக்கை 2.66 மில்லியனாகவும், மயில்களின் எண்ணிக்கை 4.24 மில்லியனாகவும் காணப்படுகிறது.
குரங்குகளின் எண்ணிக்கையை மாவட்ட அடிப்படையில் பார்க்கையில் கண்டி மாவட்டத்திலும், கேகாலை மாவட்டத்திலும் அதிகளவில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் குறைவான அளவில் தான் குரங்குகள் வாழ்கின்றன. புனித தலங்கள் மற்றும் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் குரங்குகள் அதிகளவில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளன.
அநுராதபுரம், குருநாகல், அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் மந்திகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றன.குருநாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மர அணில்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றன. அதேபோல் அநுராதபுரம்,மொனராகலை ,குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய உலர்வலய மாவட்டங்களில் மயில்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றன.
மூன்று ஆண்டுகளின் பின்னர் காட்டு விலங்குகளின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்த கணக்கெடுப்பு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டன. காட்டு விலங்குகினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நடவடிக்கைகளுக்கு இந்த கணக்கெடுப்பு தரவுகள் முக்கியமானதாக அமையும்.இந்த கணக்கெடுப்பில் குறைப்பாடுகள் காணப்படலாம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். கிடைக்கப் பெற்ற மதிப்பீட்டு தரவுகளை அடிப்படையாக்க கொண்டு இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது.
விவசாயத்துறை அமைச்சின் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் ஹேமந்த சமரசிங்க குறிப்பிடுகையில், இந்த கணக்கெடுப்புக்கான செலவு குறித்து ஒருசில ஊடகங்கள் போலியான செய்திகளை வெளியிட்டுள்ளன.காட்டு விலங்குகளை கணக்கெடுப்பதற்கா சுமார் 70 இலட்சம் படிவங்கள் அரச அச்சகத் திணைக்களத்தின் ஊடாக அச்சிடப்பட்டன. இதற்கு 24 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டன.
மாதிரி படிவம் அச்சிடல், எரிபொருள் மற்றும் பயணச் செலவு என்ற அடிப்படையில் மொத்தமாக 27 இலட்சத்து 16,314 ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டன. கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவு ஏதும் வழங்கப்படவில்லை. குறைவான செலவில் இந்த கணக்கெடுப்பு நிறைவுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.





