விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி அரேபிய நாட்டவர் கைது
சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 266 என்ற விமானத்தில் பயணித்த பயணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
 
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கடமையில் இருந்த இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 266 என்ற விமானத்தில் பயணித்த பயணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க தயாரான போதுஇ பாதுகாப்புக்காக அனைத்து பயணிகளையும் ஆசனப் பட்டிகளை அணிந்து தங்களது இருக்கையில் அமருமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் பயணி ஒருவர் , அதனை மீறி கழிவறைக்குச் செல்ல முயன்ற நிலையில் விமானப் பணிப்பெண்களுடன் முரண்பட்டுள்ளார். இதன்போது இரண்டு விமானப் பணிப்பெண்களைத் குறித்த நபர் விமானத்தினுள் வைத்து கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் அளித்ததை அடுத்து விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் காலை 06.30க்கு தரையிறங்கிய நிலையில் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக மலேசியாவுக்குச் செல்ல இருந்த 28 வயதான சவுதி அரேபிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேகநபர் தொடர்பில் விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.