மஹிந்தவை நேரில் சந்தித்த கோட்டா
இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடலின் போது, ஆரம்பத்தில் அதிகளவில் குடும்ப விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான பொதுஜன பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
கார்ல்டன் இல்லத்திற்கு 21-09-2025 அன்று மதியம் சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவி அனோமா ராஜபக்ஷவும் மஹிந்த ராஜபக்ஷவுடன் நீண்ட நேரம் உரையாடினார்.
இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடலின் போது, ஆரம்பத்தில் அதிகளவில் குடும்ப விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது.
ஆதனைத்தொடர்ந்து சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் பெரமுனவின் அரசியல் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் உரையாடல்கள் நடைபெற்றிருந்தன.
இதனையடுத்து கோட்டாபய தனது சகோதரருடன் மதிய போசனத்தை அருந்தியதோடு பிற்பகலில் தேரர்கள் வரவளைக்கப்பட்ட பிரித் ஓதப்பட்டதோடு ஆசீர்வாத்தினையும் பெற்றுக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளார்.





