அரசியலில் கைதை ரணில் எதிர்கொள்வார்: மஹிந்த
முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதியொருவருக்கு இவ்வாறு இடம்பெறுவது சிறந்த விடயமல்ல.
நாட்டு மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சரியாகப் புரிந்துகொண்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் பழிவாங்கும் செயல்களைத் தவிர வேறொன்றும் இல்லை. அரசியலில் கைது என்பது ஒரு மரபாகும். ரணில் விக்கிரமசிங்க அதை எதிர்கொள்வார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் 23-08-2025 அன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ரணில் விக்கிரமசிங்க இயல்பாகவே எம்முடன் கலந்துரையாடினார். அவர் இவற்றை பெரிதாகக் கருத்திற் கொள்ளவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அரசியலில் ஈடுபடுவதாயின் இது ஒரு மரபாகும். அந்த வகையில் இவ்வாறான சம்பவங்கள் அவருக்கும் உரித்தாகும்.
எவ்வாறிருப்பினும் அவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. சிறிய விடயங்களுக்காக அரச தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவது தவறு என்பதே எனது நிலைப்பாடாகும். முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதியொருவருக்கு இவ்வாறு இடம்பெறுவது சிறந்த விடயமல்ல.
இதற்கு மக்களே பதிலளிக்க வேண்டும். இது அரசியல் பழிவாங்கல் அன்றி வேறொன்றும் இல்லை. நாம் மக்களை நேரிப்பதால் தான் அவர் இன்றும் எம்மை நேசிக்கின்றனர் என்றார்.





