Breaking News
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை
2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாக தீர்க்க தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 17-11-2025 அன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாக தீர்க்க தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசாங்கத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் தமது சங்கம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்க தீர்மானித்ததாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.