முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு பிணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை 30-09-2025 அன்று கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்னவின் தலைமையில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

போலி ஆவணங்களைத் தயாரித்து அரசாங்கத்துக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
போலி ஆவணங்களைத் தயாரித்து அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை 30-09-2025 அன்று கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்னவின் தலைமையில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிபதி சந்தேகநபர்களான பிரசன்ன ரணவீர மற்றும் சரத் எதிரிசிங்க ஆகியோரை கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவித்திருந்தார். அதற்கமைய சந்தேகநபர்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்து சரீரப் பிணைகளிலும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையும் வித்து விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன், நீதிமன்றம் சந்தேகநபர்களு வெளிநாடு செல்ல பயணத்தடை விதித்தும், கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி குற்றப் பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும் பிணை நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.