முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கைது
2014 ஆம் ஆண்டு அனுராதபுர மாவட்டத்தின் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு நிவாரண விலையில் பெற்றுக்கொடுப்பதற்காக 25 மில்லியன் ரூபா சோள விதைகள் அப்போதைய அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
விவசாயிகளுக்கு நிவாரண விலையில் பெற்றுக் கொடுப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட 25 மில்லியன் ரூபா பெறுமதியான சோள விதைகளை தமது நெருங்கிய தரப்பினர் மூலம் பகிர்ந்தளித்து அரசியல் இலாபத்தை அடைய முயற்சித்ததாக தெரிவித்து முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன
நேற்று ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் விசாரணை அதிகாரிகளால் இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதற்கமைய சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
2014 ஆம் ஆண்டு அனுராதபுர மாவட்டத்தின் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு நிவாரண விலையில் பெற்றுக்கொடுப்பதற்காக 25 மில்லியன் ரூபா சோள விதைகள் அப்போதைய அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த ஜனாதிபதி தேர்தலில் அரசியல் இலாபத்தை அடைந்து கொள்ளும் நோக்கில் அனுராதபுர மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளை அச்சுறுத்தி தமது நெருங்கிய தரப்பினரால் மூலம் அவற்றை விவசாயிகளுக்கு பகிரந்தளித்தமை ஊடாக அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் விவசாயத்துறை அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என விசாரணை அதிகாரிகளால் முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அவர் நேற்று முற்பகல் ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதற்கமைய சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன நேற்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.





