சதாரண டீசலுக்க 100ரூபா மானியம் வழங்குகின்றோம் - பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் தெரிவிப்பு
உலக சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டால், அது கூட்டுத்தாபனம் வழங்கி வரும் மானிய நட்டத்தை ஈடுசெய்யவே பயன்படுத்தப்படுமே தவிர, நுகர்வோருக்கு உடனடியாக விலை குறைப்பை வழங்க முடியாது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது சாதாரண டீசல் ஒரு லீற்றருக்கு 100 ரூபா மானியம் வழங்கி வருவதாக அதன் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இதேவேளை, லங்கா ஐஓசி, மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூடுதலான மானியங்களை வழங்குகின்றது.
உலக சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டால், அது கூட்டுத்தாபனம் வழங்கி வரும் மானிய நட்டத்தை ஈடுசெய்யவே பயன்படுத்தப்படுமே தவிர, நுகர்வோருக்கு உடனடியாக விலை குறைப்பை வழங்க முடியாது.
அத்துடன், கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வரும் எரிபொருள் மானியங்கள் காரணமாக கூட்டுத்தாபனத்திற்கு 5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள நிலையில், இவ்வாறான மானியங்களை தொடர்ந்து வழங்குவது நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு முரணானது என்பதால், இது அவர்களின் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்றார்.