பிள்ளையானுக்கு திடீர் சுகயீனம் வைத்தியசாலையில் அனுமதி
கடந்த சில தினங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு நேற்று முன்தினம் (15) பிற்பகல் திடீர் சுகயீனம“ ஏற்பட்டுள்ளது.
சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் விசாரணையின் பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்திலான் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய கடந்த சில தினங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு நேற்று முன்தினம் (15) பிற்பகல் திடீர் சுகயீனம“ ஏற்பட்டுள்ளது. உடல் நலகுறைவு காரணமாக அவர் உடனடியாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் வைத்தியர்களின் கண்காணிப்பிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இவர் கைது செய்யப்பட்ட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.





