முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி கைது
விசாரணைக்காக நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில், விசாரணைகளுக்கு ஒத்துழைக்காத குற்றத்தின் பேரில் சந்தேகநபர் மேற்படி கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஓய்வு பெற்ற இராணுவ லுத்தினன் கேர்ணல் வன்னியாராச்சி நெவில் என்னும் நெவில் வன்னியாராச்சி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு 9 இலக்கம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 127 (1பிரிவு) (யு) மற்றும் (எ) இணைப்பிரிவுக்கமைய குற்றமிளைத்ததன் காரணமாக ஓய்வு பெற்ற இராணுவ லுத்தினன் கேர்ணல் வன்னியாராச்சி நெவில் என்னும் நெவில் வன்னியாராச்சி 01-10-2025 அன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்காக நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில், விசாரணைகளுக்கு ஒத்துழைக்காத குற்றத்தின் பேரில் சந்தேகநபர் மேற்படி கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைதான சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். மேலும் கடந்த டிசம்பர் மாதம் முறைகேடான விதத்தில் சொத்து சேகரித்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவு சந்தேகநபர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.