நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வைத்து கைச்சாத்திட்டனர்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தவறிவிட்டார் என்று குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலினால் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தனது பொறுப்பை நிறைவேற்ற தவறிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி நேற்று வெள்ளிக்கிழமை தீர்மானித்தது.
இதற்கமைய குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வைத்து கைச்சாத்திட்டனர்.
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் கையொப்பத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.





