Breaking News
விடத்தல்தீவு சரணாலயம்: வனஜீவராசிகள் அமைச்சரின் வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
சுற்றாடல் நீதிக்கான நிலையம் உட்பட பல சுற்றாடல் குழுக்கள் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வில்பத்து விடத்தல்தீவு இயற்கை சரணாலயத்தின் ஒரு பகுதியை இறால் பண்ணை திட்டத்திற்காக ஒதுக்குவதற்காக வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துச் செல்வதற்கு உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (22) அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றாடல் நீதிக்கான நிலையம் உட்பட பல சுற்றாடல் குழுக்கள் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 12, 2024 அன்று நடைபெற உள்ளது.