புனித யாத்திரிகர் தலமாக சபரிமலை: அமைச்சரவை அனுமதி
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரிகர் தலமாக சபரிமலை வழிபாட்டுத் தலத்தைப் பிரகடனப்படுத்தல் மற்றும் வசதிகளை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரிகர் தலமாக சபரிமலை வழிபாட்டுத் தலத்தைப் பிரகடனப்படுத்தல் மற்றும் வசதிகளை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பக்தர்களுக்கான போக்குவரத்து மற்றும் வீசா வசதிகளை இலகுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்த தீர்மானம் எடுக்கப்படும் இரு பிரதான காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் வீசா வசதிகள் தொடர்பிலேயே அவதானம் செலுத்தப்பட்டது. இவ்விரண்டுக்குமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை இலக்காகக் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரிகர் தலமாக சபரிமலை வழிபாட்டுத் தலத்தைப் பிரகடனப்படுத்தல் மற்றும் வசதிகளை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீண்டகாலமாக இலங்கையின் இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 01 ஆம் தொடக்கம் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவின் கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்தி;ற்குச் சென்று தரிசிக்கின்றனர்.
தற்போது ஆண்டுதோறும் 15,000 இற்கும் அதிகமான இலங்கையின் இந்து பக்தர்கள் கலந்து கொள்கின்ற தலயாத்திரை மையமாகவும் அமைந்துள்ளது. அதற்கமைய, இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு இலங்கை இந்து யாத்திரிகர்களால் மேற்கொள்ளப்படுகின்ற வழிபாட்டு தரிசிப்பானது, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித தலயாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





