மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்கள் கைது
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடி படகுகளின் ஒரு தொகுப்பை இலங்கை வடமேற்கு கடற்படை கட்டளை கண்டுள்ளது.
மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்கள் மற்றும் 04 இந்தியப் படகுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாருக்கு தெற்கே வடமேற்கு கடற்பரப்பில் குதிராமலே முனையில் கடந்த 08 ஆம் திகதி கடற்படையினரும் இலங்கைக் கடலோர காவல்படையும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த இடைமறிப்பு மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடி படகுகளின் ஒரு தொகுப்பை இலங்கை வடமேற்கு கடற்படை கட்டளை கண்டுள்ளது.
இதற்கு பதிலடியாக, மன்னாருக்குத் தெற்கே வடமேற்கு கடற்பரப்பில் குதிரமலை முனையில் வேட்டையாடும் இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடலோர காவல்படை கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த நான்கு படகுகளும் 35 இந்திய மீனவர்களும் இலங்கைக் கடற்படை கப்பல் எஸ்எல்என்எஸ் விஜயவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவை மேலதிகக் சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி மீன்பிடி காவல்துறைப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.





