வெலிகம பிரதேச சபையின் தலைவரின் பாதுகாப்புகோரிக்கை கடிதம் குறித்து பொலிஸ் விளக்கம்
பொலிஸ்மா அதிபரால் அந்த கடிதம் தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ;ட பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
 
        
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர, தான் படுகொலை செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொலிஸ்மா அதிபருக்கு கடந்த செப்டெம்பர் 6ஆம் திகதி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரால் அந்த கடிதம் தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ;ட பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர, தான் படுகொலை செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியதாக கூறப்படும் கடிதம் தொடர்பில் விளக்கமளித்து பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :  வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர, கடந்த 22ஆம் திகதி பிரதேச சபை அலுவலக அறையில் அடையாளம் தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். உயிரிழந்த அவர் தனக்கு உயிர் அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், அதற்குத் தேவையான பாதுகாப்பை வழங்குமாறும் கோரி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதம் தற்போது பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி கடந்த செப்டெம்பர் 6ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக பொலிஸ்மா அதிபர் செப்டெம்பர் 12ஆம் திகதி தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பின்னர் தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேற்படி கடிதத்தை மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் மாத்தறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக வெலிகம பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் மிதிகம பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.





 
  
