பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை கொடுப்போம்: பிரதி அமைச்சர் மஹிந்த
எமது முதலாவது வரவு - செலவு திட்டத்திலேயே நாம் அரச உத்தியோகத்தர்களுக்கு ஆகக் கூடிய சம்பள அதிகரிப்பை வழங்கியிருந்தோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தனித்து தீர்மானிக்க முடியாது. முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறான பேச்சுவார்த்தை ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று நம்புவதாக பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் 24-07-2025 அன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது முதலாவது வரவு - செலவு திட்டத்திலேயே நாம் அரச உத்தியோகத்தர்களுக்கு ஆகக் கூடிய சம்பள அதிகரிப்பை வழங்கியிருந்தோம். அதற்கமைய தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்திருந்தோம். அதாவது ஆகக் குறைந்த அடிப்படை சம்பளத்தை 30, 000 வரை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரியிலிருந்து 30 000 ரூபாவாகக் குறைந்த சம்பளம் வழங்கப்படும். அதற்கான சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது, அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட மக்கள் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான வாழ்வாதாரத்;தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். எவ்வாறிருப்பினும் இந்த தொகையும் போதுமானதல்ல என்பதை நாம் அறிவோம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தனித்து தீர்மானிக்க முடியாது. முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்பினை வெளியிடவில்லை. எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.