புத்தர் சிலை நிறுவப்பட்ட காணியில் புதிய கட்டுமானங்களுக்கு தடை: திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவு
திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.என்.எம். சம்சுதீன் 19-11-2025 அன்று இது தொடர்பான வழக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூதூர் நிருபர் திருகோணமலை பிரடரிக்கோட்டை வீதியில் உள்ளசர்சைக்குரிய ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமானதென தெரிவிக்கப்பட்ட காணியில் தற்காலிக கட்டடத்தின் தற்போதைய கட்டுமானங்களில் எந்தவித மாற்றமும் செய்ய வேண்டாம் மற்றும் புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்கள் எதனையும் செய்யக்கூடாது என்றும் திருகோணமலை நீதிமன்ற நீதிவான்உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.என்.எம். சம்சுதீன் 19-11-2025 அன்று இது தொடர்பான வழக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எல். அஜித் குமார, துறைமுக பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரி கே.டபிள்யூ.ஜி.எஸ்.கே. சமரசிங்க ஆகியோர் சமர்ப்பித்த ‘பி’ அறிக்கையை பரிசீலித்த பின்னர் நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
திருகோணமலையில் உள்ள கடற்கரையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்காணியில் தேரரின் சட்டவிரோத கட்டுமானம் கட்டுவது தொடர்பாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறு தொடர்பாக பொலிஸார் இந்த ‘பி’ அறிக்கையை சமர்ப்பித்திருந்தனர்.
இவ்விடயம் நாடு பூராகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இவ்வழக்கு நேற்று நீதிமன்றத்தில். எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.





