அதிகார கதிரையில் ஒட்டிக்கொண்டிருப்பது நோக்கமல்ல: ஜனாதிபதி அநுர
2024 ஆம் ஆண்டு அரசியல்மாற்றத்துடன் இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டது.இதனால் ஒருசிலர் தற்போது கலக்கமடைவது ஒன்றும் புதிதல்ல,
பதவியை ஏற்கும் போது பதவியில் இருந்து வெளியேறும் காலத்தையும் நிர்ணயித்துக்கொண்டோம். அதிகார கதிரையில் பசைபோல் ஒட்டிக்கொள்ளும் எண்ணம் எமக்கில்லை.பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் மோசடியாளர்களிடமிருந்த அதிகாரத்தை எம்மிடம் ஒப்படைத்தார்கள்.மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிச்சயம் உருவாக்குவோம்.அதிகாரத்தை இளைஞர் தலைமைத்துவத்திடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
சுஹததாச உள்ளக அரங்கில் 12-08-2025 அன்று நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,
32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த இளைஞர் மாநாடுஇ இந்த நாட்டின் இளைஞர்களை அரசியல் கைப்பாவைகளாக மாறாது, நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் தலைவர்களாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தைக் குறிக்கிறது.
இளைஞர் சம்மேளம் தொடர்பில் பலவிடயங்கள் பேசப்படுகின்ற பின்னணியில் தான் தேசிய இளைஞர் மாநாடு நடத்தப்படுகிறது.நாட்டில் பல்வேறு அரச நிறுவனங்கள் அரச அதிகார பரிமாற்றத்துக்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. இளைஞர்களின் அபிலாசைகளை அந்நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது.சாதாரன இளைஞர் யுவதிகளுக்கு இடமளிக்கப்படவில்லை.
அரசியல் மற்றும் குடும்ப அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவே இந்நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளப்பட்டன. 2024 ஆம் ஆண்டு அரசியல்மாற்றத்துடன் இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டது.இதனால் ஒருசிலர் தற்போது கலக்கமடைவது ஒன்றும் புதிதல்ல,
அரசியல் மற்றும் குடும்ப அதிகாரத்தை கட்டியெழுப்பவும், அவற்றை தக்கவைத்துக் கொள்வதற்கும் இளைஞர் மன்றங்கள் பயன்படுத்திக்கொள்ள கூடாது என்பதே எமது நிலைப்பாடு.இளைஞர்களின் கையில் தான் நாட்டின் எதிர்காலம் என்பதை சொல்லளவில் பார்க்காமல், செயலளவில் செயற்படுத்துவோம்.
தனது அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதில் பங்காளர்களாக அல்லாமல், இளைஞர்களுக்கு அவர்களின் சரியான இடத்தை வழங்குவதன் மூலம் தனது எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கும் சக்தி கொண்ட ஒரு இளைஞர் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எதிர்கால இளைஞர் தலைமுறை உலகத்தின் முன்னிலையில் நாட்டை வென்றெடுக்கும் மற்றும் மற்றவர்கள் மீது இரக்கம் காட்டும் ஒரு இளைஞர் தலைமுறையாக இருக்க வேண்டும். இந்த நாட்டை ஒப்படைப்பதற்குத் தகுதியுள்ள அந்த இளைஞர் இயக்கத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் முயற்சி வலியுறுத்தினேன். இளைஞர்கள் இதற்குத் தேவையான தகைமைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
பதவியில் இருந்து வெளியேறும் தினத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளோம்.பதவியை நிலையானதாக தக்கவைத்துக் கொள்ளும் நோக்கம் எமக்கு கிடையாது.மோசடியாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற இந்த அதிகாரத்தை இளைஞர்களுக்கு நாங்கள் கையளிப்போம்.அதிகார கதிரையில் பசைபோன்று ஒட்டிக்கொள்ளும் எண்ணம் எமக்கில்லை. நாட்டை பொறுப்பேற்கும் சிறந்த இளைஞர் தலைமைத்துவத்தை நாங்கள் உருவாக்குவோம்.
புதிய தொழிற்றுயை உருவாக்கி தொழிலின்மை பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.தனியார் தரப்பினரின் முழுமையான ஒத்துழைப்பு இதற்காக பெற்றுக்கொள்ளப்படும் என்றார்.





