அமெரிக்க சிறப்பு தூதுவர் கஜபாகு கப்பலுக்கு விஜயம்
அமெரிக்க கடலோர காவல்படையின் நான்காவது கப்பலான எக்ஸ்-டிசிசிவ், தற்போது பசுபிக் கடற்பரப்பு வழியாக இலங்கைக்கான தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர், இலங்கைக் கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுடன் இணைந்து 'எஸ்.எல்.என்.எஸ். கஜபாகு' கப்பலுக்கு விஜயம் செய்தார். இது முன்னர் அமெரிக்கக் கடலோரக் காவல்படையிடம் இருந்த கப்பலாகும், தற்போது இது இலங்கை கடற்படையின் சேவையில் உள்ளது.
இந்த நிகழ்வானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கடல்சார் கூட்டாண்மையின் வலிமையைக் குறிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடலோர காவல்படையின் நான்காவது கப்பலான எக்ஸ்-டிசிசிவ், தற்போது பசுபிக் கடற்பரப்பு வழியாக இலங்கைக்கான தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இக்கப்பல் உத்தியோக பூர்வமாகச் சேவையில் இணைக்கப்பட்டவுடன், இருதரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன், பிராந்திய அளவிலான கூட்டுறவையும் மேம்படுத்தும். இந்த வளர்ச்சியானது, கடல் வழிகளைப் பாதுகாப்பதற்கும், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் கடற்படை உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இரு நாடுகளும் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.





