இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு அரசு மறுப்பு
வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம் சிறிலங்காவில் இனப்படுகொலை குறித்து கனேடிய அரசாங்கம் எந்தவொரு கண்டுபிடிப்பையும் மேற்கொள்ளவில்லை என்பதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது

சிறிலங்காவில் இறுதிக் கட்ட மோதலின் போது இனப்படுகொலை குற்றச்சாட்டு தேசிய அல்லது பன்னாட்டு அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரத்தாலும் நிரூபிக்கப்படவில்லை என்றும், தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் அரசாங்கம் கூறுகிறது.
புதன்கிழமை (14) ஒரு அறிக்கையை வெளியிட்ட அமைச்சு, இந்த தவறான கதையைச் சிறிலங்கா உறுதியாக நிராகரிப்பதாகவும், இது கனடாவுக்குள் தேர்தல் ஆதாயங்களுக்காக பிரதானமாக பிரச்சாரம் செய்யப்படுவதாக நம்புவதாகவும் வலியுறுத்தியது.
2021 ஏப்ரலில், கனேடிய வெளிவிவகாரங்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம் சிறிலங்காவில் இனப்படுகொலை குறித்து கனேடிய அரசாங்கம் எந்தவொரு கண்டுபிடிப்பையும் மேற்கொள்ளவில்லை என்பதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் பிராம்ப்டனில் உள்ள சின்குவாகௌசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படுவதற்கு அரசாங்கம் தனது கடுமையான ஆட்சேபனைகளை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. பிராம்ப்டன் நகர சபையின் இந்த வருந்தத்தக்க முயற்சியை தடுக்க கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.