ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி பெற்ற மேலும் பல அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளியிடப்படும்
2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை நான் கையளித்தேன்.

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிந்ததும் கூடுதல் விவரங்களை வெளியிடுவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை நான் கையளித்தேன். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும் பல அரசியல்வாதிகள் அவ்வாறு செய்துள்ளனர். மேலும் ஆவணங்களை கண்டுபிடிக்க வேண்டும்,'' என்றார்.
சில பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் ஆகியோரும் நிதியத்திலிருந்து பணம் பெற்றுள்ளதாக அமைச்சர் கூறினார். விரைவில் பட்டியலை வெளியிடுவேன் என்றார்.