Breaking News
கெஹலிய மற்றும் 3 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பு
கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 3 சந்தேக குற்றவாளிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் தொடர்புடைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 3 சந்தேக குற்றவாளிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதிவாதிகள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (29) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வழக்கின் முதலாவது சந்தேகக் குற்றவாளியை மனநல பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.





