இந்தியாவிலிருந்து புத்தபெருமானின் புனித சின்னங்கள் கொண்டு வரப்பட்டன
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தேவ்னிமோரி என்னும் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் 1960 ஆம் ஆண்டு புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தேவ்னிமோரி என்னும் புனித பூமியிலிருந்து அகழ்வாராய்ச்சியின் போது மீட்கப்பட்ட புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் 04-02-2026 அன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.
கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் 05-04-2026 காலை 6 முதல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ள புனித சின்னங்களை, எதிர்வரும் 11 ஆம் திகதி 7 மணிவரை 24 மணிநேரமும் தரிசிக்கும் அரிய வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கமைய புத்த பெருமானின் புனித சின்னங்களுக்கு நேற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டிருந்ததுடன், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் வழிபட்டிருந்தனர்.
2025 ஏப்ரல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சமயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுத்த வேண்டுகோளுக்கமைய புத்தபெருமானின் புனித சின்னங்கள் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தேவ்னிமோரி என்னும் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் 1960 ஆம் ஆண்டு புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வாராய்ச்சியின் போது பச்சை நிற பாறை கல்லினாலான பேழையும் அதனுள் இருந்து செப்பினாலான பெட்டி ஒன்றும், புத்த பெருமானின் புனித அஸ்தி அடங்கிய தங்கம் மற்றும் வெள்ளி மென்தகடுகளால் செய்யப்பட்ட மற்றொரு பேழையும் மீட்கப்பட்டுள்ளன. மேற்படி புனித சின்னங்கள் இதுவரை இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை எனவும், முதன்முறையாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே தெரிவித்துள்ளார்.





